fbpx

’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

தமிழக முதலமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட, மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். எங்கள் கட்சியினர் உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீசாரிடம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை ஒரு வார காலம் மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சனை வரும் என அனுபவரீதியாக ஆலோசனை கூறினார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அந்த கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக காவல்துறை ஒரு புகழ்பெற்றது. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது.

’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் காட்டுத்தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்? எதற்கு இந்த செய்திகளை வதந்தியாக பரப்பியிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்திருக்க வேண்டும். வன்முறையாளர்கள் பள்ளி உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகிற போது காவல்துறை பயந்து ஓடுகிறது. காவல் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றபோது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது.

’மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!

ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில் அரசை பொறுத்த வரை எந்தவித உள்நோக்கமும் இல்லை. அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள். அது கொலையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள கல்விக்கூடங்களில் மனநல ஆலோசகர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்ய வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் பிடிஆர்..! மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த நெகிழ்ச்சி..!

Mon Aug 1 , 2022
மதுரையில் விடுதி திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் பிடிஆர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை பார்த்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நாங்கள் வருவதற்கு தற்காலிக பாலம் அமைத்துவிட்டீர்கள். […]
பாஜக அரசுக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? இலவசம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கேள்வி..!

You May Like