நடிகர் வடிவேலு அய்யனார் கோவிலை அபகரிக்க முயலுவதாக கிராம மக்கள் அவர் மீது புகாரளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் வைகை புயல் வடிவேலு. இவர், தன்னுடைய கரியரில் பல வித பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அவர் கூட நடித்த பல துணை நடிகர்களும் அவர் மீது பல குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர் பொதுவாகவே கடவுள் பக்தி கொண்டவர். இந்நிலையில் தான், வடிவேலுவின் குலதெய்வ அய்யனார் கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள காட்டு பரமக்குடியில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கோவிலில் நடிகர் வடிவேலு தனது நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையறிந்து, கோவில் முன்பு அங்குள்ள கிராம மக்கள் திரண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “நடிகர் வடிவேலு எங்களிடம் கலந்தாலோசிக்காமல், அவருக்கு நெருங்கிய நபரிடம் கோவிலை ஒப்படைக்க முயற்சி செய்கிறார். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். வடிவேலின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லோருக்கும் பொதுவான குலதெய்வ கோவிலை அபகரிக்க முயற்சி செய்வதாக நடிகர் வடிவேலு மீது கிராம மக்கள் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உடலுறவு மட்டுமல்ல முத்தம் கொடுக்கும்போதும் இந்த நோய் உங்களுக்கு பரவும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!