யூடிபில் பளபளக்கும் மேனியையும் ஆரோக்கியத்தையும் பெற செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிடலாம் என்ற தகவலை பார்த்து சாப்பிட்டவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கிராமம் மின்னூர். இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் லோகநாதன். இவரது நண்பர் நாட்ரம்பள்ளியை சேர்ந்த ரத்தினம் (35) இருவரும் கல் குவாரியில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிட்டால் மினுமினுக்கும் சருமமும் உடல் ஆரோக்கியமும் பெறலாம் என்று வாட்ஸ் ஆப்பில் யூடியூப் லிங்க் வந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் இருவரும் அந்த செடியை கண்டுபிடித்து கிழங்கை சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சில மணி நேரத்தில் கடுமையான வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் லோகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபர் ரத்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யூடியூபில் என்ன தகவல் கிடைத்தாலும் எதற்கெடுத்தாலும் மக்கள் அதை பின்பற்றுகின்றனர். சமையலாகட்டும், ஆரோக்கிய குறிப்பாகட்டும் என்ன தகவல் வந்தாலும் அப்படியே நம்பி அதை பின்பற்றுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.