உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் மகேந்திரா என்ற நபர் வசித்து வருகிறார்.. இந்த நிலையில் வயிற்று வலி என்று கூறி மருத்துவமனைக்கு சென்றார். மேலும், மருத்துவர்களிடம் திறந்த வெளியில் மலம் கழித்தபோது, தனது அந்தரங்க உறுப்பு வழியாக பாம்பு ஒன்று உடலில் நுழைந்ததாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மகேந்திராவை முழுமையாகப் பரிசோதித்தனர், ஆனால் அவரது உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.. ஆனால் அதனை நம்பாத மகேந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு வலியுறுத்தினர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேந்திரன் போதையில் இந்த செயலை செய்ததாக கூறி அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.. இதுகுறித்து பேசிய மருத்துவர் ஷேர் சிங் அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர்.. அவர் தொடர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதால், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது..
அந்த நபர் தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் பீதியடைந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் காலை, அந்த இளைஞருக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது, அதில் அவர் உடல்நிலை சீராக இருப்பதும், எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை மேலதிக பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர், பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.” என்று தெரிவித்தார்..