fbpx

சினிமா பட பாணியில் பணத்தை அள்ளி வீசிய நபர்..!! வைரலான வீடியோ..!! போலீசிடம் சிக்கிய பிரபலம்..!!

சினிமா பட பாணியில் ஒரு நபர் தனது காரில் இருந்து கரன்சி நோட்டுகளை சாலையில் வீசிச்சென்ற சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விநோதமான செயல்களில் ஈடுபட்டு திடீரென பரபரப்பை கிளப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் ஒரு நபர் சினிமா பட பாணியில் உண்மையாக செய்து காட்டி தற்போது காவல்துறை கண்காணிப்பு வலையத்தில் சிக்கியுள்ளார். பாலிவுட் நடிகர் ஷஹித் கபூர் நடிப்பில் வெளியாகி பிரபலமடைந்த வெப் சீரிஸ் ‘பர்சி’. இதில், பணத்தை சாலையில் வீசி எறிவது போல காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த காட்சியை அப்படியே நினைவுபடுத்தி காட்டுவது போன்ற பரபரப்பு செயலை ஹரியானாவில் ஒரு நபர் செய்து காட்டியுள்ளார்.

ஹரியானாவில் உள்ள கோல்ப் கோர்ஸ் ரோடு பகுதியில் வெள்ளை நிறக் காரில் பயணத்த ஒருவர், முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு, அந்த காரின் பின்புற வழியாக பண நோட்டுகளை வீசி எறிந்தார். இந்த கட்சி வீடியோ பதிவாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. இந்த போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய குருகிராம் ஏசிபி விகாஸ் கவுசிக், “சமூக வலைதளத்தின் மூலமாகத் தான் இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. சினிமா காட்சியை நேரில் செய்து காட்டும் நோக்கத்தில் கோல்ப் கோர்ஸ் ரோடு பகுதியில் இரு நபர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். பொதுவெளியில் அத்துமீறி இவர்கள் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம்” என்றார்.

Chella

Next Post

கொரோனா பாதிப்பு எப்போது உச்சத்தை எட்டும்..? ஐஐடி பேராசிரியர் சொன்ன முக்கிய தகவல்..

Sat Apr 15 , 2023
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 11,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
ஜூன் மாதத்தில் பரவும் புதிய வகை கொரோனா? அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு பதில்..!

You May Like