சென்னையில் பொது குளியளறையில் செல்போனை மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துவந்த நபரை கையும் களவுமாக பிடித்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை வடபழனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 10க்கும் மேற்பட்ட வீடுகளும் அவற்றிற்கு பொது குளியலறையும் உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி அங்குள்ள குளியளறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக மர்மநபர் ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மர்ம நபரை கைது செய்தனர். இதையடுத்து அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவன் பெயர் வினோத்குமார்(37) என்பதும் தெரியவந்தது. சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் வினோத் குமார், சமீபத்தில் இவரது மனைவி இறந்ததால் தனிமையில் வசித்து வந்ததாகவும், பொதுக்குளியளறையில் செல்போனை மறைத்து வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.