நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் துணிவு .. இந்த திரைப்படத்தில் 3 வது முறையாக இயக்குனர் எச்.வினோத் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூருடன் கைகோர்த்துள்ளார் நடிகர் அஜித். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய முன்னணி நாயகியாக களம் இறங்கியுள்ளார். இதனால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக நடிகர் அஜீத் பேங்காக் சென்றிருந்தார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் 5 பேர் நடித்துள்ளனர். சிபிச்சந்திரன், ஆமீர் -பவானி உள்ளிட்டவர்களும் இதில் நடித்துள்ளார்கள். ஷுட்டிங்கின்போது அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். துணிவு செட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இந்த போட்டோவை வெளியிட்டு, ’’ நான் எப்படி சொல்வேன், என்னனு சொல்வேன் அய்யோ…இங்கு நடக்கும் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற உணர்வு என்னிடம் உள்ளது. என்ன ஒரு அற்புதமான மனிதர்’’ என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சமுத்திரக்கனி, ஜான் , வீரா , அஜய், ஜி எம். சுந்தர், உள்ளிட்டோர் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்த படம் திரைக்கு வர உள்ளது என படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றார்கள்