fbpx

உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவ லிங்கம்.. வியர்த்தபடி காட்சியளிக்கும் சிவகாமி.. வெட்டு காயத்துடன் பூலாநந்தீஸ்வரர்..!!

இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது புதிதாக கட்டப்படும் கோயிலை தவிர, முன்னோர்களால் கட்டபட்ட ஒவ்வொரு பெரிய கோயிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவு படுத்தும் விதமாகக உள்ளன. நாம் பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் பல அற்புதமான மற்றும் ஆச்சர்யமான உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் சன்னதியில் அமைந்துள்ள அம்மனை சிவகாமி அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மனுக்கு அர்ச்சகர் எத்தனை முறை அலங்காரம் செய்தாலும் முகத்தில் மட்டும் வேர்வை வடிந்து கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கத்தின் சிலை வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கூறப்பட்டு வருவது, மன்னன் ஆலிங்கனம் சிவனுடன் சண்டை செய்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் நினைவாகவே வெட்டு காயத்துடனும், மன்னனின் மார்பு கவச தடத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பவர்களின் பார்வை எந்த அளவிற்கு உயரமாக செல்லுமோ அந்த அளவிற்கு இக்கோயிலின் சிவலிங்கம் உள்ளது என்பது தனி சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் அதிசயம் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார். இந்த திருக்கோயிலில் நடராஜர், சிவகாமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

மேலும் இந்த ஊரில் சுரபி எனும் நதி உள்ளது. இந்த நதியில் இறந்தவர்களின் எலும்புகள் விழுந்தால் அந்த எலும்புகள் கல்லாக மாறும் என்றும், இக்கோயிலின் மரத்தில் பூக்கும் நாகலிங்கப்பூவின் நடுவில் லிங்கம் உள்ளது போலவும், லிங்கத்தை சுற்றி ஆதிசேஷன் நிற்பது போலவும் உள்ளது. எனவே இந்த பூவை பக்தர்கள் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து சென்று வழிபட்டு வருகின்றனர்.

Read more : கொடூரத்தின் உச்சம்!!! 9 மாத குழந்தையை, மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..

English Summary

The Phulanandeeswarar temple in Theni Chinnamanur is amazingly displaying the idol of Shiva that changes according to your height.

Next Post

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...! 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றி உத்தரவு...!

Tue Jan 28 , 2025
In the school education sector, 47,000 temporary posts, including 28,030 graduate teaching posts, have been made permanent.

You May Like