fbpx

நடுவானில் விமானத்தின் எஞ்சினை ஆஃப் செய்ய முயன்ற பைலட்..!! அலறிய பயணிகள்..!! நடந்தது என்ன..?

அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது காக்பிட்டில் இருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஒருவர் திடீரென விமானத்தின் என்ஜின்களை ஆப் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானி அப்போது பணியில் இல்லை. அவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். பணியில் இருந்த விமானியின் கண்களில் மண் தூவிவிட்டு எஞ்சினை ஆப் செய்ய இவர் முயன்றுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஹாரிஸ்ன் ஏர் எம்பரர் இ 175 என்ற விமானத்தில் தான் நடந்துள்ளது.

இந்த விமானம் வாஷிங்டனில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் போது தான் இந்த ஆப் டியூட்டி விமானி திடீரென விமானத்தின் எஞ்சினை நிறுத்த முயன்றுள்ளார். விமானத்தில் மொத்தம் 80 பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் உடனடியாக அருகே இருந்த ஓரிகான் ஏர்போர்ட்டிற்கு திருப்பி விடப்பட்டது.

இது தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் “அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காக் பிட் அருகே இருந்த நபர் எஞ்சினை நிறுத்த முயன்றார். இருப்பினும், விமானத்தின் கேப்டனும் முதல் அதிகாரியும் துரிதமாகச் செயல்பட்டு விமானம் ஆஃப் ஆகாமல் தடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக இருந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

’சோசியல் மீடியாக்களை ஆஃப் செய்ய கோடிகளை கொடுத்த சிவகார்த்திகேயன்’..!! புட்டு வைக்கும் ப்ளூ சட்டை மாறன்..!!

Tue Oct 24 , 2023
தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது சிவகார்த்திகேயன் – டி இமான் விவகாரம் தான். இவரா இந்த மாதிரி செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் சிவகார்த்திகேயனின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது இமான் கூறிய விஷயம் தற்போது […]

You May Like