fbpx

தெருநாயால் தரையிறங்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்ற விமானம்..!! எங்கு தெரியுமா..?

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம் நேற்று மதியம் கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது. அங்கு வந்தடைந்த விமானம், தரையிறங்கும் வேளையில், தெருநாய் ஒன்று ஓடுபாதையில் அலைந்து கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட விமானி, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்திற்கே திருப்பினார்.

இதையடுத்து, பெங்களூருவில் இருந்து மாலை 04:55 மணியளவில் விமானம் புறப்பட்டு, மாலை 06:15 மணியளவில் கோவா வந்தடைந்துள்ளது. இதுகுறித்த நகர்வுகளை விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனுக்குடன் தங்களது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கோவா விமான நிலைய இயக்குநர் எஸ்.வி.டி.தனம்ஜெய ராவ், “டபோலிம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெருநாய் காணப்பட்டதால், விமானியிடம் சிறிது நேரம் தாக்குப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், விமானத்தை அவர் பெங்களூருக்கே திரும்ப விரும்பினார். விமான ஓடுபாதையில் எப்போதாவது தெருநாய் நுழையும் சம்பவங்கள் நடக்கும். ஆனால், அங்கிருக்கும் ஊழியர்களால் உடனடியாக அந்தப் பகுதி சரிசெய்யப்பட்டுவிடும். இருப்பினும், என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுக்கால பதவிக்காலத்தில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை” என்று அவர் கூறினார்.

Chella

Next Post

பெரும் விபத்து..!! 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!! 36 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

Wed Nov 15 , 2023
ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தில் பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

You May Like