அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்திற்கு அருகே 10 பேருடன் சென்ற விமானம், திடீரென மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் மதியம் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் என்ற சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டது. ஆனால், அந்த விமானம் 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்தது.
பிற்பகல் பெரிங் கடலுக்கு மேலே நோம் நகரத்திற்கு செல்லும் பாதையில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடும் பணியும் நடந்து வருகிறது.
மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்துள்ளனர்.
Rea More : மகிழ்ச்சி…! அங்கன்வாடி சேவைகளை கண்காணிக்க தொழில்நுட்பம்…! மத்திய அமைச்சர் தகவல்