தருமபுரியில் ஜெய்கணபதி பைனான்ஸ் நிறுவனம் நிதி மோசடி செய்துள்ளதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உழவர் சந்தை அருகில், ஸ்ரீ ஸ்ரீ ஜெய்கணபதி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை பெற்றும், மாதாந்திர எலச் சீட்டு, மற்றும் சிறு சேமிப்பு திட்டம் ஆகியவைகளை நடத்தி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கானது தற்போது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ஜெய் கணபதி பைனான்சில் மாதாந்திர எலச் சீட்டு, வைப்பு தொகை மற்றும் சிறு சேமிப்பு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்கள் வசம் உள்ள அசல் ஆவணங்களுடன் எழுத்து மூலமாக புகார் கொடுக்க வேண்டும் என மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.