fbpx

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை அடித்தே கொன்ற போலீஸ்..? சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை போலீசார் அடித்துக் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சுகுமார் (36). இவர் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் ‌. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சுகுமாரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கடந்த 27-ம் தேதி சுகுமாரை வழக்கு விசாரணைக்காக மயிலாப்பூர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது திடீரென சுகுமாருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவுடி சுகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சுகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவர் நலமாக இருந்ததாகவும், விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற சுகுமார் திரும்பி வராததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்குச் சென்று கேட்ட போது தான் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதுவரை போலீசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு ரவுடி சுகுமாரின் உறவினர்கள் ஒன்றுகூடி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Chella

Next Post

’ரஜினியை மறைமுகமாக தாக்கிய ரத்னகுமார்’..!! திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Thu Nov 2 , 2023
‘லியோ’ வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையான நிலையில், அவர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார். லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடிகர் ரஜினியின் குட்டி கதைக்கு நடிகர் விஜய் மேடையில் பதிலடி கொடுத்தார். ‘அப்பாவின் நாற்காலிக்கு மகன் ஆசைப்படுவதில் என்ன தப்பு இருக்கு? பெரிதாக ஆசைப்படுங்கள்’ என்று […]

You May Like