fbpx

டிகிரி முடித்திருந்தால் போதும்.. நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை..!! – ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

திருநெல்வேலி மாவட்ட நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணி : சமுதாய அமைப்பாளர்

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

மேலும் அறிக ; விமர்சிப்பவர்களுக்கு நன்றி.. எனது பணியின் மூலம் உங்களுக்கு பதிலளிப்பேன்..!! – உதயநிதி அதிரடி பேச்சுவ்

English Summary

The post of Community Organizer is going to be filled in Tirunelveli District Municipal Administration Department Office.

Next Post

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த கார்கே.. "மோடியை அகற்றும் வரை உயிருடன் இருப்பேன்..!!" - காங்கிரஸ் தலைவர் சூளுரை

Sun Sep 29 , 2024
Congress national president Mallikarjun Kharge fell ill during the election campaign in the Kathua district of Jammu and Kashmir on Sunday.

You May Like