fbpx

இலாகா இல்லாத அமைச்சர் பதவியும் பறிபோகிறது..!! செந்தில் பாலாஜிக்கு வைத்த செக்..!! சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இருப்பினும், அன்றைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இதய பிரச்சனை இருந்த நிலையில், அவருக்கு ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவர் மீது 120 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜாமீன் பெறக் கடுமையாக முயலும் போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கிடையே அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் செந்தில் பாலாஜி கைதாகியுள்ள போதிலும், அவர் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார். அவர் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்க உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டது.

செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவிநீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்குகளை முடித்துவைத்தது.

இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அமர்வு இன்று இந்த மனுவை விசாரிக்கும் நிலையில், இதில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

47-வது புத்தகக் காட்சி...! மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்படும்...!

Fri Jan 5 , 2024
பபாசியின் 47-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனத்தில், 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி […]

You May Like