fbpx

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பாதிப்பு குறித்து வெளியான தகவல்..

சீனாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கம் 40.01 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 82.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று சீனா பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அலேர் நகரிலிருந்து 105 கிமீ தொலைவிலும், ஷாயா கவுண்டி இருக்கையிலிருந்து 141 கிமீ தொலைவிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அப்பகுதியை சுற்றி உணரப்பட்டது.. எனினும் இதுவரை உயிர் சேதமோ, கட்டிடங்கள் சேதமோ ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் சுமார் 70 பேர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். ஷாயா மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இரண்டு வாகனங்களுடன் நிலநடுக்கத்தின் மையப் பகுதியை ஆய்வு செய்து வருகிறது. பவர் கிரிட் செயல்பாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் முக்கிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Maha

Next Post

தூக்கில் தொங்கிய தனியார் பள்ளி ஆசிரியை..!! காதல் தோல்வியால் விபரீத முடிவு..!! அதிர்ச்சி..!!

Mon Jan 30 , 2023
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ஊழியப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் வஸ்மிதா (21). ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து விட்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வஸ்மிதா, வீட்டின் அறையை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த […]

You May Like