ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் ஒருவருடன் சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டியில் ராமகிருஷ்ணன் (48) என்பவர் வீட்டிற்கு மாந்திரீகம் மற்றும் குறி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் , ராமகிருஷ்ணணுக்கும் இடையே நாள்பட பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்தப்பெண் அடிக்கடி குறி பார்க்க அவரிடம் சென்றிருக்கிறார். இதனிடையே சென்னையில் இருக்கும் தன்னுடைய கனவருக்கு சரியான வேலை அமையவில்லை என்று கூறி குறி பார்த்துள்ளார். அப்போது மாந்தீரிகம் செய்த ரச மணி போன்ற ஒன்றை கொடுத்து இதை கழுத்தில் அணிந்து கொண்டால் குடும்ப பிரச்சனை தீர்ந்து விடும் மற்றும் பணம் வரவு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தனது 8 வயது மகளுக்கு அமாவாசையின் இரவில் சிறப்பு பூஜை செய்து வர செல்வம் பெருகும் என்று கூறி பேச்சாலே வசியம் செய்துள்ளார். இந்த நிலையில் சென்ற மாதம் காரைக்குடி பகுதியில் காட்டு பகுதியில் அந்த மாந்திரிக சாமியாருடன் இரவு அமாவாசை பூஜைக்கு 8 வயது சிறுமியை நிர்வாணமாக அமர வைத்துள்ளானர். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார்.
சிறுமிக்கு நடந்த இந்த பாதிப்பிற்கு பெற்ற தாயும் உடந்தையாக இருந்திருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் காவல்துறையினர் சாமியார் ராமகிருஷ்ணன் மற்றும் உடந்தையாக இருந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.