fbpx

நேரலையில் மயங்கி விழுந்த தொகுப்பாளர்!… வெப்பம் குறித்த செய்தியை வாசிக்கும்போது நிகழ்ந்த அதிர்ச்சி!

Doordarshan Anchor: கொல்கத்தாவில் வெப்பம் குறித்த செய்தியை வாசித்து கொண்டிருக்கும்போதே நேரலையில் தூர்தர்ஷன் தொகுப்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தற்போது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் கடுமையான வெப்ப அலைகள் நிலவுகிறது. இந்தநிலையில், தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் வெப்பம் குறித்த செய்தியை தொகுப்பாளர் லோபாமுத்ரா சின்ஹாவாசித்துக்கொண்டிருந்தார். அப்போது நேரலையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தொகுப்பாளர் லோபாமுத்ரா சின்ஹா, லோபாமுத்ரா சின்ஹா நிகழ்ச்சியின் போது தனது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. நிகழ்ச்சிக்கு முன்பு தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இருப்பினும், ஒரு கிளாஸ் தண்ணீர் தனக்கு போதும் என்று நினைத்துக் கொண்டே செல்ல முயன்றேன்” என்று பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் வெளியில் வந்ததில் இருந்து, மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் வாழ்த்தினார்கள்.

Readmore: குட்நியூஸ்!… இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு பெறலாம்!… வயது வரம்பு நீக்கம்!

Kokila

Next Post

கன்பியூசன் ஆன தேர்தல் ஆணையம்…! 3 வது முறையாக மாற்றம்..! இப்போது 69.71 சதவீதம்..!

Mon Apr 22 , 2024
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதத்தை 3வது முறையாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 மக்களவைத் தொகுதி என 40 இடங்களுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து இரவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.71 சதவீத வாக்குகள் […]

You May Like