fbpx

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்னும் என்ன வெயிட்டிங்.. சீக்கிரமா நகை வாங்கிடுங்க!!

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும்  வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

நேற்று (அக்.23ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று(அக்.24ஆம் தேதி) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 55 குறைந்து ரூ. 7,285ரூபாய்க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கம் ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.6010க்கும், ஒரு சவரன் ரூ.48,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; ரேஷன் கடைகளிலும் இனி சேமிப்பு கணக்கு தொடங்கலாம்..!! சூப்பர் அறிவிப்பு

English Summary

The price of 22 carat jewelery gold in Chennai fell by Rs 440 per pound today to Rs 58,280 per pound.

Next Post

ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு..!! குடும்ப அட்டைதாரர்கள் குஷி..!! கூட்டுறவுத்துறையின் மாஸ் திட்டம்..!!

Thu Oct 24 , 2024
An important announcement has been made regarding the opening of savings accounts in ration shops.

You May Like