fbpx

ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.520 உயர்வு..!! இன்றைய நிலவரம் இதோ..

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15%இல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால், தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,295-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை குறித்து தற்போது பார்க்கலாம்.

சென்னையில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 520 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்தை எட்டியது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ 58,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 65 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,360-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ரூ 107 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. கடற்கரை- செங்கல்பட்டு இடையே ரயில்கள் ஓடாது..!!

English Summary

The price of 22 carat jewelery gold rose by Rs 420 per sawan to Rs .58,880 per sawan in Chennai today.

Next Post

ராணுவ பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. கை நிறைய சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Sat Oct 26 , 2024
Post Graduate Teachers, Graduate Teachers and Primary School Teacher Posts are being filled in Army Public Schools.

You May Like