சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் திடிரென ஏப்ரல் 23ஆம் தேதி சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது.
அதனையடுத்து நேற்றைய தினம் (ஏப்ரல் 24) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.66,730-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 25) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.20 உகுறைந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளியின் விலை கடந்த சில தினங்களாக குறைந்தே காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 50காசுகள் குறைந்து 86 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.86,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.