ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு தினமும் தங்கம் விலை புதிய உச்சம் தொடுகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையே அட்சய திருதியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதால் மக்கள் நகைக் கடைகளில் காலை முதலே குவிந்தனர். அட்சய திருதியையொட்டி நகைக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டு விற்பனை களைகட்டின.
ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கும் வர்த்தகமான நிலையில், பெரும்பாலான கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்நிலையில், அட்சய திருதியை முடிந்த மறுநாள் முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.
மே 2 ஆம் தேதியான இன்று தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,775-க்கும், சவரனுக்கு ரூ.1,60 குறைந்து ஒரு சவரன் ரூ.70, 040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ..