தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தங்கம் விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 7,060 ரூபாயாகவும் 1 சவரன் தங்கம் 56, 480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து, 7,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் தங்கம் விலை, 320 ரூபாய் உயர்ந்து, 56,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவிருப்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இத்தகையச் சூழலில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Read more ; மயோனைஸ் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா? நிபுணர்கள் சொல்வது என்ன?