fbpx

தொடர்ந்து ஷாக் தரும் தங்கம் விலை.. தவிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து  ரூபாய்  6,980 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய்  55,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,435  எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Read more ; தமிழகமே…! பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை முதல் இது கட்டாயம்… வருகிறது புதிய ரூல்ஸ்…!

English Summary

The price of gold has been rising continuously for the past few days. With that in mind, let’s take a look at today’s gold and silver prices.

Next Post

ஒரு நைட்டுக்கு ரூ.10,000..!! வாட்ஸ் அப்பில் வந்த இன்ஸ்டா அழகிகள்..!! ஸ்பாட்டுக்கு போன மேனேஜருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Mon Sep 23 , 2024
The WhatsApp number received a message on the 13th asking "Want a girl for fun?"

You May Like