சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அண்மைக் காலமாகவே தங்கத்தின் விலை ஏற்றமும், தாழ்வுமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் – காஸா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை ரூ.60,000-ஐ நெருங்கி விற்பனையானது.
இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 10) சற்று அதிகரித்துள்ளது.
நேற்று வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்திருந்தது. அதன் படி தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 7130 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 7ஆயிரத்து 205 ரூபாயாகவும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு 57ஆயிரத்து 540 ரூபாய்க்கு வி்ற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read more ; திருவண்ணாமலை தீப திருவிழா.. மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி உண்டா?