தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இடையிடையே விலை குறைந்தாலும் அதிக நாட்கள் விலை உயர்ந்தே வந்தது. இதனால், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு நகைபிரியர்களை அதிர வைத்து வருகிறது.
இதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய வரி விதிப்புகளால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதலீட்டாளர்களால், பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டு, அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை ஏப்.09 ஆம் தேதி முதல் தடாலடியாக உயரத்தொடங்கியது. தங்கம் விலை கடந்த 9 ஆம் தேதியில் இருந்து ஜெட் வேகத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு உயர்ந்து ரூ. 8,775 ஆக விற்பனையானது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 ஆக விற்பனையாநது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.4,460 உயர்ந்தது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தங்கம் விலையின் புதிய உச்சம் ஆகும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று தங்கம் விலை குறைய தொடங்கியது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,755 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.108க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read more: விண்வெளிக்கு செல்லும் சிங்க பெண்கள்.. 60 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை..!!