fbpx

Gold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 உயர்வு..!! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இங்கு விற்கப்படும் 90 சதவீத தங்கம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதால், தங்கம் விலையில் எப்போதும் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தைகள் அதிரடியாக சரிவை கண்டன. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச்சந்தையும் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8,510-க்கும், ஒரு சவரன் ரூ. 68,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 2 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று (ஏப்ரல் 3) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read more: எலோன் மஸ்க் DOGE தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா?. வெளியான அறிக்கையால் உயர்ந்த டெஸ்லா பங்குகள்!.

English Summary

The price of gold jewelry in Chennai has increased by Rs. 400 per sovereign.

Next Post

அதிகாலையில் நிறைவேறிய வக்பு சட்ட மசோதா..!! சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Thu Apr 3 , 2025
Chief Minister MK Stalin has said that a case will be filed in the Supreme Court on behalf of the DMK against the Waqf Amendment Bill.

You May Like