fbpx

OMG..! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2200 உயர்வு..!! இது சரித்திர உச்சம்.. ஆடிப்போன மிடில் கிளாஸ் மக்கள்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2200 உயர்ந்து ரூ.74,320-க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான்.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில்தான் சர்வதேச பொருளாதாரச் சூழல் நிலவுவது மேலும் அச்சத்தைக் கூட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரேன் போர், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் உள்ளிட்ட காரணங்களால், உலகப் பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருந்தது. இதனால் உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

கடந்த 16 ஆண்டுகள் இல்லாத அளவு பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற இரக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: போப் ஃபிரான்சிஸ் மரணத்திற்கு என்ன காரணம்? வெளியான மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி..!!

English Summary

The price of gold jewelry in Chennai rose by Rs. 2,200 per sovereign today, selling for Rs. 74,320.

Next Post

புழக்கத்திற்கு வரும் போலி ரூ.500 நோட்டுகள்.. மத்திய அரசு எச்சரிக்கை..!! எப்படி கண்டறிவது..?

Tue Apr 22 , 2025
Centre issues alert over high-quality counterfeit ₹500 notes; highlights key identifier

You May Like