fbpx

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..! சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு..!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் திடிரென ஏப்ரல் 23ஆம் தேதி சவரனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது.

அதனையடுத்து நேற்றைய தினம் (ஏப்ரல் 25) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் (ஏப்ரல் 26) சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வெள்ளியின் விலை கடந்த சில தினங்களாக குறைந்தே காணப்பட்ட நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 2ரூபாய் உயர்ந்து 88 ரூபாய்க்கும், 1கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.88,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kathir

Next Post

இனி குழந்தைகளுக்கு Horlicks, Boost வேண்டாம்..!! பாட்டி சொன்ன இந்த ஊட்டச்சத்து பவுடர் போதும்..!!

Fri Apr 26 , 2024
குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போன்விட்டா உள்ளிட்ட பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம் பாட்டி காலத்தில் பருப்பு, தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அது தான் ஆரோக்கியமானதும் கூட. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது. காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த […]

You May Like