fbpx

குறைந்த வேகத்தில் சரசரவென்று ஏறிய தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன…!

Today Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை உயர்ந்து பரமபத ஆட்டம் ஆடி வருகிறது. கடந்த மார்ச் 28ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

தங்கத்தின் விலை பரமபதம் ஆடி வரும் நிலையில், இந்நிலையில் ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நகை விற்பனையாளர்களும் நிபுணர்களும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் ஆபரணத் தங்கம் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

தங்கத்தின் விலை நேற்று (மே 1) ஒரேடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635 விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் இறங்கிய வேகத்தில் ஏறியுள்ளது.

அதன்படி இன்றைய தினம்(மே 02) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 6,715 விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.87.00-க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.87,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Kathir

Next Post

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம்..!! உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

Thu May 2 , 2024
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விநியோகித்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர். இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அதாவது, அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் […]

You May Like