சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனையாகிறது..
உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை உயர்வதும், பின்பு குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ.5,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400க்கு விற்பனையாகிறது.