fbpx

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,700க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

ஆசையாய் பேசி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன்..!! பலமுறை உல்லாசம்..!! பெற்றோர் அதிர்ச்சி

Tue Mar 21 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாணவியிடம் […]

You May Like