fbpx

வீடு, மனையின் விலை பன்மடங்கு உயருகிறது..!! பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் இன்று பதிவுத்துறைக்கான சேவைக் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதால், வீடுகள், மனைகளின் விலையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, பதிவுத்துறை சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “ரசீது ஆவணத்திற்கான பதிவுக்கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று இருந்தது. இந்தக் கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் அமலுக்கு வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் பதிவுத் துறை சேவைக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் தற்போது கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் மனைகள், வீடுகளின் கட்டணம் சதுர அடிக்கு பன்மடங்கு உயரும் என்று கட்டிடத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

தமன்னாவின் ஐட்டம் டான்ஸ்சை பார்த்து காதலன் என்ன சொன்னார் தெரியுமா..? நீங்களே பாருங்க..!!

Mon Jul 10 , 2023
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அடுத்தடுத்து வெப் தொடரில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார் தமன்னா. இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் வெளியாகி, சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது. இதற்கு காரணம் […]

You May Like