சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடித்து வருகிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்றுமுன்தினம் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இருப்பினும் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,800-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.54,400-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ரூ.96.20-க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று அதே விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.