தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் நிறுவனமானது மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வரும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை திடீரென்று நிறுத்தியது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
4.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக டிலைட் என்ற புதிய பாலை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. இதற்கிடையே, தனியார் நிறுவனமான ஆரோக்கிய பால் நிறுவனம் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. அதேபோல் தயிரின் விலையும் ஒரு கிலோவுக்கு எட்டு குறைப்பதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தற்போது அரசின் ஆவின் நிறுவனம் பச்சை பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், தனியார் பால் பாக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் அந்த பால் பாக்கெட்டை மக்கள் நாடி செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.