முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதால் தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர்.
இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும்” என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என பிரதமர் மோடி கூறிய விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் பிரதமர் இத்தனை முறை தமிழகம் வந்து திரும்ப சென்றுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தான் அண்ணாமலை எங்கு வேண்டுமானாலும் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிகிறது.
வாய்க்கு வந்தபடி எதனை வேண்டுமானாலும் பேச முடிகிறது. முதல்வர் எங்களை போன்றவர்களை அடக்கி வாசிக்க சொல்லி இருப்பதால் தான் அண்ணாமலை போன்றோர் எல்லாம் இவ்வாறு பேசி வருகிறார்கள்” என தெரிவித்தார்.
Read More : மழை வெள்ளத்தின்போது திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில், 5400 மத்திய அரசு கொடுத்தது..!! அண்ணாமலை ஒரே போடு..!!