தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் லொள்ளு சபா மனோகர். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்கள், தொடர்களில் நடித்தாலும் பெரியளவு வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பலமுறை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த லொள்ளு சபா மனோகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”நலிந்த கலைஞர்கள் பட்டியலில் என்னையும் சேர்க்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு என் வீட்டில் இருந்து நடந்தே வருகிறேன். அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஏதோ டிபன் சாப்பிடுவேன் அவ்வளவு தான். தயாரிப்பாளர் ரிஷிராஜ் எனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டும். இதற்காக நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தபோதும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
வடபழனிக்கும், வீட்டிற்கும் நடந்து கொண்டே இருக்கிறேன். தயாரிப்பாளர் பைக்கில் வந்து கொண்டுதான் இருக்கிறார். நடிகர் சங்கம் தான் இதைத் தீர்த்து வைக்க வேண்டும். நடிகர் சங்கத்திற்குள் வந்துவிட்டால், எந்த கவலையும் இருக்காது. எனது கண்ணீர், ஆதங்கம் குறித்து நடிகர் சங்கத்திடம் முறையிடவில்லை. ஏற்கனவே முறையிட்ட விஷயங்களே இதுவரை நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Read More : மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான்..!! யோகத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்..!!