fbpx

ரூமுக்குள் வைத்து ஆர்.ஜே.பிராவோவை பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளர்..!! ஷாக்கிங் தகவல்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் “உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்” என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை விசித்ரா தனது ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை நடந்த சம்பவத்தை பகிர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசுகையில், ”எங்க அப்பாவுக்கு தான் நான் டிவியில், மீடியாவில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கும் பெரிதாக எதுவும் வரவில்லை. அவரது உயிர் என் கண் முன்னாடி தான் போனது. இப்படி இருக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் பேசினார். “தம்பி நீ வா. உன்னை வச்சி பெருசா ஒரு விளம்பரம் படம் ஷூட் பண்றேன்” என சொன்னார். ஆனால், அவர் யாரென்றே எனக்கு தெரியாது.

இருந்தாலும் அவர் கூப்பிட்டதால் நானும் கோவைக்கு சென்றேன். அங்க ஹோட்டல் ரூமுக்குள் கூப்பிட்டு போனதும் கதவை பூட்டி விட்டு என்னுடைய சட்டையை கிழிக்க தொடங்கினார். சொல்லப்போனால் அது ஒரு பாலியல் தொல்லை முயற்சி தான். எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. கையெல்லாம் காயம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் நியூஸை படித்துள்ளேன். ஆனால், எனக்கே இப்படி நடக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. எதுக்குடா இங்க வந்தோம்? இந்த வாய்ப்பு நமக்கு தேவையா? ஒரு வாய்ப்புக்காக யாரையோ நம்பி சீர்கெட்டு இங்க வந்து நிற்கிறோமே என நினைத்து என்னை நானே அசிங்கமாக நினைத்துக் கொண்டேன்.

பின்னர், அவரை தள்ளி விட்டு சட்டை கூட இல்லாமல் அந்த ஹோட்டலை விட்டு ஓடினேன். எதுவும் நடக்கல. ஆனால், அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை. மனதில் ரொம்ப காயமாக மாறிவிட்டது. இதனால் சக மனிதர்களுடன் சென்றால் கூட பயமாக மாறிவிட்டது. இதுக்காகவே நான் துபாய்க்கு ஓடி விட்டேன். எனக்கு இங்கே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தான் உள்ளது” என்றார்.

Chella

Next Post

கனமழை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..! மேலும் ஒரு மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..!

Fri Nov 24 , 2023
நாளைய தினம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் நாளைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதால் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. இது குறித்த அறிவிப்பில், நாளைய தினம்(25.11.2023) கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் […]

You May Like