fbpx

குட் நியூஸ்…! ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம்…! மத்திய அரசு முக்கிய தகவல்…!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான பிரதமரின் உணவு தானியத் திட்டம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், செயல்பட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் தானிய திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 90 ஆயிரத்து 997 கோடி ரூபாய் மதிப்பில் 1118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்ப, உணவு அமைச்சகம் செயல்பட்டு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், 17 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக நடைமுறை சீர்திருத்திங்களின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுகிடையேயான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டம் 2019ம் ஆண்டில் 4 மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அது நடைமுறைக்கு வந்துள்ளது‌ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

TVS நிறுவனத்தில் ஏராளமான காலி பணியிடங்கள்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Tue Dec 13 , 2022
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Principle Product Owner பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]

You May Like