இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் தேவையில்லை.. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தனது இசையால் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இசை கடவுள், இசை ஞானி, மேஸ்ட்ரோ என பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியில் லண்டனில் வரும் 8-ம் தேதி அரங்கேற்ற உள்ளார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை செய்ய உள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா இந்த நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் கிளம்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல.. நாட்டிற்கான பெருமை.. சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக, உலகின் தலைசிறந்த இசைக்குழுவினர் ராயல் கரீபியன் ஆஃப் லண்டன் இசைக்குழுவினர் வாசிக்க உள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இது ஒரு பெரிய விருந்தாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது தமிழராக எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா மனிஷனாக எப்படி உணர்கிறீர்கள் என்று கேளுங்கள் என்று பதிலளித்தார். மேலும் இதுபோன்ற இடைஞ்சலான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும் இசையமைப்பாளர் தேவா தனது இசையை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், காப்பி ரைட்ஸ் கேட்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக போயிட்டு இருக்கிறேன். நல்ல மனதுடன் வந்திருக்கிறீர்கள். அனைவரும் வாழ்த்தி இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.” என்று கூறினார்.
மேலும் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல.. இது நாட்டின் பெருமை.. இன்கிரெடிபிள் இந்தியா மாதிரி, இன்கிரெடிபிள் இளையராஜா தான்” என்று தெரிவித்தார்.
#Watch | "இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை..!"
— Sun News (@sunnewstamil) March 6, 2025
-சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் பேட்டி!#SunNews | #Ilaiyaraaja | @ilaiyaraaja pic.twitter.com/ieHcF5WoX1
Read More : அட்லீ – சல்மான் கான் ரூ.650 கோடி பிரம்மாண்ட படம் நிறுத்தி வைப்பு… ரஜினி தான் காரணமா..?