fbpx

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி; ஆஸ்பத்திரியில் உயிரிழப்பு..!!

சென்னை அயனாவரம் பகுதியில் வசிப்பவர் ரவுடி ஆகாஷ். இவர் பெரம்பூரை சேர்ந்த பால கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து, பால கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் ஓட்டேரி காவல்துறையினர் கடந்த 20-ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அதன் பின்னர், 21-ஆம் தேதி ஆகாஷிடம் காவல்துறையினர் விசாரண செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி ஆகாஷ் அதிக போதையில் இருந்தால் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவு செய்த காவல்துறையினர், கடந்த 21-ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஆகாஷின் சகொதரியிடம் அவரை ஒப்படைத்துள்ளனர். வீட்டிற்கு வந்த ஆகாஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதை தொடர்ந்து 8 நாட்கள் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று உயிரிழந்துள்ளார். ஆகாஷின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள் பல குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த துறைரீதியாக உத்தரவிட்டு உள்ளனர். விசாரணைக்கு பின்னர் ஆகாஷின் மரணம் பற்றிய உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

குமரி அனந்தனுக்கு அரசு வீடு..! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Thu Sep 29 , 2022
தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர்  வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு […]

You May Like