fbpx

‘செயல்பாடுகளை முடித்து கொண்ட 15 நிதி நிறுவனங்கள்..’ – RBI தகவல்..!

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கான உரிமங்களை வழங்குவது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அது குறித்து எச்சரித்து அதனை சரி செய்வது என்பன உள்ளிட்ட செயல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது. இந்நிலையில், 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டாட்டா கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் உள்ளிட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில் 9 வங்கி சாராத நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேடிஎஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஜோதானி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் , ஏபிஆர்என் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், டாடா கேபிட்டல் ஃபைனான்ஸ் சர்வீசஸ் லிமிடெட் , டாடா க்ளீண்டெக் கேபிடல் லிமிடெட், நேபெரால் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் , யுஎஸ்ஜி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் , உர்ஜா கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் , மற்றும் வந்தனா டீலர்ஸ் ஆகிய நிறுவனங்களும் உரிமங்களை ஒப்படைத்து விட்டன. இந்த ஒன்பது நிறுவனங்களும் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய உரிமங்களை ஒப்படைத்துவிட்டன.

மேலும், வியான் குரோத் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட், டிராப் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜூவல் ஸ்டிரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் , ரிவால்விங் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட், அன்சு லீசிங் பிரைவேட் லிமிடெட், மற்றும் ஏவிபி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களும் நிதி வணிகத்தில் இருந்தே வெளியேறிவிட்டன.

Next Post

இதற்கெல்லாம் விவாகரத்தா..!! 'Kurkure' வாங்கி வர மறந்த கணவர் - விவாகரத்து கோரிய பெண்!

Tue May 14 , 2024
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ‘குர்குரே’ வாங்கி வருவதற்கு கணவர் மறந்த நிலையில், திருமணமான ஒரே வருடத்தில் அவரது மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் ஒருவர், பிரபல பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டியான குர்குரே பாக்கெட் வாங்கித் தராததால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். அட இதுக்குக் கூடவா விவாகரத்து என்பது போல் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. குர்குரே திண்பண்டத்துக்கு அந்தப் […]

You May Like