fbpx

“சீமானை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை..” தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெல்வோம் – அண்ணாமலை

கோவையில் பத்திரிக்கியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது என்றார். மேலும் சீமானின் கொள்கை தேர்தலில் தனியாக போட்டியிடுவது இல்லை. அவரை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்பது தான் காரணம் என்று கூறினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் பேசியதாவது, “தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அனைத்து தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். ஆகையால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க. முழுமையாக வரவேற்கிறது. மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க., த.மா.கா. போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கை தந்துள்ளோம். மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கி உள்ளது.

இந்தியா கூட்டணியில் முன்னணியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, திமுக கூலிப்படை ஏவி விடுகிறது, பாஜகவினர் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மாணவர்களுக்கு காலை உணவு தந்த தனியார் அமைப்பை தி.மு.க. நிறுத்தியது ஏன்? காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என தி.மு.க. சொந்தம் கொண்டாடாமல் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

பாஜக சீமானின் சவாலுக்கு தயார். 10 சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுவோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், தி.மு.க.வை எதிர்க்க சீமான் வேண்டும்.

கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று முதலில் கூறிய தமிழக காவல்துறைக்கும், தி.மு.க. அரசிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை. தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் கவர்னர் கையெழுத்திட கூடாது.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தி.மு.க.வினர் வாயால் வடை சுடுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 39 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Kathir

Next Post

வாகன ஓட்டிகளே..!! இனி குறைந்த விலையில் பெட்ரோல் போடலாம்..!! எப்படி தெரியுமா..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Sep 2 , 2023
இந்தியாவில் கடந்தாண்டு பாதி வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்வதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக […]

You May Like