உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது…
500 பணக்காரர்களின் தினசரி தரவரிசையைத் தயாரித்து ப்ளூம்பெர்க் நியூஸ் இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ப்ளூம்பெர்க் சமீபத்திய உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளது.. அவரின் நிகர சொத்து மதிப்பு, 188 பில்லியன் டாலராகும்.. டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் 145 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்..
அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் 121 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.. இந்திய தொழிலதிபரான கௌதம் அதானி 4-ம் இடத்திற்கு சரிந்துள்ளார். கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது..
111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.. ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 84.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.
மறுபுறம், அதானியின் சொத்து மதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 872 மில்லியன் டாலர் சரிவை சந்தித்துள்ளது.. கடந்த ஆண்டு ஜனவரி 24,முதல் 683 மில்லியன் டாலர் சொத்துக்களை அதானி இழந்துள்ளார். அதே போல், அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 457 மில்லியன் டாலர் குறைந்துள்ளது.. கடந்த ஆண்டு ஜனவரி 24 முதல், 2.38 பில்லியன் டாலர் சொத்துக்களை அம்பானி இழந்துள்ளார்.. இருப்பினும், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அதானி, அம்பானி தொடர் நீடிக்கின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா குழுமத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய நிறுவனமாக அதானி குழுமம் இருக்கிறது. துறைமுகங்கள், மின்சாரம், பசுமை ஆற்றல், எரிவாயு, விமான நிலையங்கள் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும். அதானி குழுமம் இப்போது 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..