fbpx

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4805-க்கு விற்பனையாகிறது…. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.64.70-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,700-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

’சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது எப்போது?’ - வைகோ

Tue Jul 5 , 2022
தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்துள்ளனர். கைதான 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளனர். மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் […]

You May Like