கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.39 உயர்ந்து, 4,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ரூ. 39,520-க்கு விற்பனையாகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.80 காசுகள் உயர்ந்து ரூ. 68.50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 68500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நவம்பர் 14உடன் ஒப்பிடேம்பொது ஒரே நாளில் ரூ.312 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த விலை பட்டியல் இன்று காலை 11 மணியளவு மட்டுமே இருக்கும், அதன் பிறகு புதிய விலையின் அறிவிப்பு,ஏற்றம் இறக்கத்துடன் விலையில் மாற்றம் இருக்கலாம்.