fbpx

வென்டிலேட்டர் உள்ளிட்ட சுவாச கருவிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!… பிலிப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்!

பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாச கருவிகளில் பொறுத்தப்பட்ட பஞ்சு போன்ற நுரை பொருள் ஒன்றினால், சுவாசக் கருவியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் இதர எலெக்ட்ரானிக் சாதனங்கள் வரை கோலோச்சும் பிலிப்ஸ் நிறுவனம் உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களையும் தயாரித்து வருகிறது. அவற்றில் சுவாசம் தொடர்பான பல உபாதைகளுக்கான பல்வேறு ரகங்களிலான சுவாசக் கருவிகளையும் உலகம் முழுக்க பிலிப்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், சுவாசத்துக்கு அவசியமான வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளின் முக்கியத்துவத்தை கொரோனா காலத்தில் உணர்ந்திருப்போம். ஆனால் உயிரைக் காக்க வேண்டிய அந்த சுவாசக் கருவிகளால் புற்றுநோய் ஏற்படுவதாக கூறி பிலிப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உலகம் முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது அந்த கருவிகளில் பொறுத்தப்பட்ட பஞ்சு போன்ற நுரை பொருள் ஒன்றினால், சுவாசக் கருவியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து விளைந்திருக்கிறது.

சோபா மற்றும் மெத்தைகள் தயாரிப்பில் உபயோகமாகும் ’ஃபோம்’ நுரை பொருளின் இன்னொரு வடிவத்தை சுவாசக் கருவிகளில் பிலிப்ஸ் பயன்படுத்தி இருக்கிறது. அதனை விட தரமான பொருளை போட்டி நிறுவனங்கள் பயன்படுத்திய போதும், லாப நோக்கில் தரம் குறைவான நுரை பொருளை சேர்த்திருக்கிறது பிலிப்ஸ். இதனால், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் சாதாரண எரிச்சல் முதல் உயிரைப் பறிக்கும் புற்றுநோய் வரை ஏற்பட காரணமானது. 10 வருடங்களுக்கு முன்னரே குற்றச்சாட்டு எழுந்தபோதும் தவறை ஒப்புக்கொள்ளாது சமாளித்து வந்த நிலையில், புலிட்சர் விருது பெற்ற புரோபப்ளிகா என்ற செய்தியகம் சுமார் ஒரு வருட காலம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளின் அடிப்படையில், பிலிப்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

’காலையில பாட்டு போட்டதும் அரைகுறை ஆடையுடன்’..!! பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய கூல் சுரேஷ்..!!

Thu Oct 5 , 2023
பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதில், கூல் சுரேஷ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து தனது […]

You May Like