காராமணி பயறு வகைகளில் ஒன்றாகும். இது தட்டை பயறு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவை நமது உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளையும் கொடுக்கிறது. மேலும் இந்தப் பயறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காராமணியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. காராமணியில் இருக்கக்கூடிய அதிக அளவிலான இரும்புச்சத்து நமது உடலுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காராமணி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இவற்றில் இருக்கக்கூடிய கால்சியம் மற்றும் அக்னிசியம் போன்றவை நமது உடலின் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இவற்றில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், புரதம் மற்றும் விட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கும் பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடுத்து என்றும் இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு உதவுகிறது
காராமணியில் இருக்கக்கூடிய அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காராமணியை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் காராமணி உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாதம் ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.