fbpx

அண்ணாமலை போன ரூட் தப்பா போயிடுச்சு!… நடைப்பயண கூட்டம் எப்போதும் ஓட்டாகாது!… அண்ணாமலையை சீண்டிய எஸ்.வி.சேகர்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 300 தொகுதிகளில் ஜெயிக்கும் என்றும் பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் ஜீரோ தான் கிடைக்கும் என்றும் அதற்கு காரணம் முழுக்க முழுக்க அண்ணாமலை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

நடைபயணம் போனால் பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று அண்ணாமலை தவறான கணக்கு போடுகிறார் என்றும் அவரால் ஒரு சீட்டை கூட பாஜகவுக்கு வெற்றி பெற்று தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடித்திருப்பதாகவும், ராமரின் அருள் அவருக்கு இருப்பதாகவும், அதனால் பாரதிய ஜனதா கட்சி 300 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார்

மேலும் விஜய் அரசியல் குறித்து கூறிய போது விஜய் ஒரு தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தான் அவர் அரசியலில் நிலைப்பாரா? இல்லையா என்பதை பற்றி சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

Kokila

Next Post

வாவ்...! தனி நபர்கள் வாங்கும் கடனுக்கு 1 வருடம் உத்தரவாதம் அளிக்கப்படும்...! மத்திய அரசு

Mon Feb 5 , 2024
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சமூகத்துறை முன்முயற்சிகள் கீழ் 2014-15 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் “பட்டியல் இனத்தவருக்கான கடன் மேம்பாட்டு உத்தரவாதத் திட்டம்” அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ரூ.200 கோடி ஆரம்பகட்ட நிதியுடன் தொடங்கப்பட்டது. பட்டியலின வகுப்பினருக்கான தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் கடன் வழங்கும் வங்கிகளின் (எம்.எல்.ஐ) நிறுவனங்களுக்கு கடன் மேம்பாட்டு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோரை […]

You May Like