fbpx

”உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா”..? ”இந்த தேதி வரை காத்திருங்கள்”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். ஆனால், நேற்றே பலருக்கு வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அத்துடன் பலருக்கும் நீங்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். மாதம் மாதம் உங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று எஸ்எஸ்எஸ் வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 1.63 கோடி பேர். இவர்களில் தகுதியானவர் 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1 அனுப்பி சரிபார்க்கும் நடைமுறையும் தொடங்கிவிட்டது.

இந்த தகவல் எஸ்எம்எஸ் வாயிலாக பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முதலில் ஒருவருக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதிக்க முடிவு செய்து, பணத்தையும் அனுப்பியுள்ளனர். ஆனால், ஒருவருக்கு ஒரு ரூபாய் அனுப்பினாலும் மொத்தம் 1.06 கோடி செலவாகும் என்பதால் ஒரு ரூபாய் அனுப்பி சோதிக்கும் முறையை கைவிட்டுவிட்டார்களாம். அதற்கு பதில் 10 பைசா அனுப்பப்படுகிறதாம். அப்படி 10 பைசா அனுப்பினாலும் 10.06 லட்சம் செலவாகும். நேற்றே பலருக்கும் எஸ்எம்எஸ் வந்த நிலையில் இன்றும் பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

வரும் 18ஆம் தேதி வரை பணம் அனுப்பும் பணியினை வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். அதற்குள் தேர்வு செய்யப்பட்ட மெசேஜ் அல்லது பணம் ஆகியவை வரும். ஒருவேளை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான எஸ்எம்எஸ்ம் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்து பயன் பெறலாம். எனவே பணம் வரவில்லை, எஸ்எம்எஸ் வரவில்லை என்றால் செப்.18ஆம் தேதி வரை காத்திருங்கள்…

Chella

Next Post

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! மாதந்தோறும் இந்த தேதியில் தான் மகளிர் உரிமைத் தொகை உங்க வங்கி கணக்குக்கு வந்து சேரும்..!

Fri Sep 15 , 2023
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேற்றைய தினம் முதல் செலுத்தப்பட்டு வருகிறதது. இந்த மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் எந்த தேதியில் வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்ற […]

You May Like